Sunday, April 19, 2026
Homeமருத்துவம்மனித இதயத்தின் கட்டமைப்புக்களும் தொழிற்பாடுகளும் – ஆழமான அறிவியல்

மனித இதயத்தின் கட்டமைப்புக்களும் தொழிற்பாடுகளும் – ஆழமான அறிவியல்

மனித உடலில் இதயமானது கூம்பு வடிவானது.

மனித உடலில் இதயமானது கூம்பு வடிவானது. இது மூன்று இழைய படைகளினால் ஆனது.அவை இதய புறதசை , இதயத்தசை ,இதயவறைஉள்மென்சவ்வு. என்பனவாகும்.

முதலாவதாக இதய அறை சுற்றுச்சவ்வு

முதலாவதாக இதய அறை சுற்றுச்சவ்வினை எடுத்து நோக்கும் இடத்தில்

இது வெளிப்புறமாக காணப்படும் படையாகும். இது இரண்டு பைகளினால் ஆனது. வெளிப்புற பகுதியானது நாரினால் ஆன இதய வரை சுற்றுச்சவ்வும், உட்புறமானது நீர் பாய இதயவறை சுற்றுச் சவ்வினாலும் ஆனது.

இரண்டாவதாக இதயத்தசை

இரண்டாவதாக இதயத்தசையினை எடுத்து நோக்கும் இடத்தில் இது இதயத்தில் காணப்படும் நடுப்படையாகும்.

இவை விசேட வகை இதயத்தசை கலங்களினால் ஆனது. இத்தசையில் விசேடமாக கடத்தும் நார்கள் வளைய அமைப்பில் பரவி காணப்படும்.இதனூடாக மின் சமிக்கைகள் கடத்துவதற்கு உதவுகிறது.

மூன்றாவதாக இதய வறை உள்மென்சவ்வு

மூன்றாவதாக இதய வறை இனை நோக்குமிடத்து இது இதயத்திலே உட்பக்கமாக காணப்படும் படையாகும். இது இதயத்தில் அறைகளையும் சோணைகளையும் கொண்டு காணப்படும்.

தட்டையான மேலணிக்கலம் காணப்படும். உள்போர்வையாக குருதிக் கலன்கள் போர்வையாக தொடர்ந்திருக்கும்.

இதய அறைகள்

இதயமானது நான்கு அறைகளை கொண்டது. இரண்டு சோனையறைகளும் இரண்டு இதய வறைகளும் காணப்படும். சோனியறைகள் மேற்பகுதியிலும் இதய வறைகள் கீழ் பகுதிகளிலும் காணப்படும்.

உடல் முழுவதும் குருதியை பம்பும் தொழிலை இதய அறைகள் மேற்கொள்கின்றன. அதே வேளை சோணை அறைகள் இதய அறைக்குள் மட்டும் குருதியை பம்புகின்றன. இதய வரை சுவர் வலது இதய வறை சுவரினை விட தடிப்புக்குரியதாக காணப்படுகின்றது.

இதற்கு காரணம் இடது இதய வறை உடல் கலங்கள் முழுவதற்கும் குருதியை செலுத்துவதாகும். அதே வேளையில் சுவாசப்பை நாடியானது சுவாச பைகளுக்கு குருதியை வழங்குகின்றது.

இதய வறையிலிருந்து தொகுதிப் பெருநாடிக்கு செலுத்தும் குருதியின் அமுக்கமானது வலது இதய வறையில் இருந்து சுவாசப்பை நாடிக்கு செலுத்தப்படும் அமுக்கத்தினை விட கூடுதலாகவே காணப்படும். இதனாலேயே இடது இதய வரை சுவர் தடிப்பானதாக காணப்படுகின்றது.

இதய வால்வுகள்

இதயம் வலது ,இடது பகுதிகளாக நடுக்கோட்டு பிரிசுவரினால் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியும் சோனை அறை, இதய வறை என்று வால்வினால் பிரிக்கப்பட்டிருக்கும்.

அதாவது வலது சோனை அறையும் , வலது இதயவறையும் முக்கூர் வால்வினால் பிரிக்கப்பட்டிருக்கும்.இது மூன்று மடிப்புகளை கொண்டது.அதேபோல் இடது சோனை அறையும் இடது இதய அறையும் இருகூர் வால்வினால் பிரிக்கப்பட்டிருக்கும்.

இது இரண்டு மடிப்புகளை கொண்டது. இவ்வால்வினை மைட்டர் வால்பு என்றும் அழைப்பார்கள்.

இதயச் சிம்பிகள் மற்றும் இதய நாண்

இதயத்தின் உள்சுவரிலே கூம்பு வடிவிலான இதயச் சிம்பிகள் காணப்படும். சிம்பித் தசைகள் இதய வறை, சோனையறை வால்புகளின் சோனியா இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும்.

நார் ஆனது இதய நாண் என்று அழைக்கப்படும். இதனால் வால்புகளானது மடிபடுவது தடுக்கப்படுகின்றது.

அரைமதி வால்வுகள்

சுவாசப்பை நாடி காணப்படும் வலது இதய வறையில் சுவாசப்பை நாடி தொடங்கும் இடத்தில் அரை மதி வால்வு காணப்படும்.

அதேபோல் தொகுதி பெரும் நாடி காணப்படும் இடது இதய வறையில் தொகுதிப்பெருநாடி தொடங்கும் இடத்தில் அரைமதி வால்வு காணப்படும்.இவை இதய அறைகளில் குருதியானது பின்னோக்கி செல்வதை தடுக்கின்றது.

குருதி ஓட்டம்

வலது இதய வறையில் மேற்பகுதியானது ஒட்சிசன் குறைந்த குருதியினை கொண்டிருக்கும்.

இதனூடாக சுவாசப்பை நாடி வெளியேறுகின்றது.இந்த சுவாசப்பை நாடியானது வலது , இடது சுவாசப் பைகளுக்கு வலது, இடது சுவாச கல நாடிகளாக கிளைத்து ஒட்சிசன் குறைந்த குருதியினை சுவாசப்பைக்கு கொண்டு சேர்க்கும்.

ஒவ்வொரு சுவாசப் பையிலும் இரண்டு சுவாசப்பை நாளங்கள் நான்கு சுவாசப்பை நாளங்களாக ஒட்சிசன் செறிவு கூடிய குருதியை மீண்டும் இடது சோணையறைக்கு கொண்டு செல்லும்.

ஒட்சிசன் செறிவு கூடிய குருதியைக் கொண்ட தொகுதிப் பெரு நாடியானது இடது இதய வறையில் இருந்து மேற்பகுதியில் வெளியேறும். மேற்பெரு நாளம், கீழ்ப்பெருநாளம் என்பன சோனையறையில் திறக்கின்றன.

இதயத்திற்கு குருதியினை வழங்கும் நாடி இடது முடியுரி நாடி என்று அழைக்கப்படும்.

இதயத்தின் கடத்தும் தொகுதி

இதயத்தின் கடத்தும் தொகுதி.

இதயத்தில் உருவாகும் மின் கணத்தாக்கமானது குடா சோனை , சோணை அறை இதய வறைகணு மற்றும் சோணையறை இதய வறை கட்டு ,கிர்ஷ்பேர்கின் கட்டு இவற்றினூடாக பரவுகிறது.

S.A கணு

இது விசேடமடைந்த கலங்களின் சிறிய திணிவு ஆகும்.வலது சோனையறையின் தசைப்படையில் மேற்பெருநாளம் திறக்கும் இடத்திற்கு அருகில் காணப்படும்.

இதயச்சுருங்களுக்கான அசைவு S.A கணுவினால் தொடங்கி வைக்கப்படும். இதனை இதய இயக்கி என்றும் அழைப்பார்கள்.

A.V கணு

விசேடமடைந்த சிறிய கலத்திணிவு ஆகும். இது இடது ,வலது சோனை அறைகளுக்கு இடையில் உள்ள பிரிசுவரில் அமைந்துள்ளது.A.V கணுவானது மின்சமிக்கைகளை சோனை அறைகளில் இருந்து இதயவறைகளுக்கு கடத்துகின்றது.

சோணைஅறை இதய வறை கட்டுக்கள்

விசேடமடைந்த நார்களின் திணிவே ஏவி கட்டு ஆகும்.இது ஏ.வி கணுவில் இருந்து உற்பத்தியாகும். ஏவி கணுவானது கிளைகளாக பிரிந்து செல்கின்றது.இவை பேக்கிங் நார்கள் என்று அழைக்கப்படும். ஏ.வி கட்டுக்களின் கிளைகளும் பேர்கின் நார்கள் உம் மின்சமிக்கிகளை இதயத்தின் உச்சிக்கு கொண்டு செல்கின்றது.

இந்த கணத்தாக்கத்தின் விளைவாக இதயமானது சுருங்கத் தொடங்குகின்றது. மேல்நோக்கியும் , வெளிநோக்கியும் பரவி ஒரே சமயத்தில் சுவாசப்பை நாடி தொகுதி பெரு நாடிகளின் ஊடாக குருதியினை பம்புகின்றது.

இதய வட்டம்

ஒரு இதய துடிப்பின் போது நடக்கும் தொடரான நிகழ்வு இதய வட்டம் எனப்படும்.ஒரு இதய துடிப்பின் போது குருதி நிரம்புதல் ஆகிய செயற்பாடுகள் நடைபெறும். ஒரு பூரண இதய வட்டமானது 0.8செக்கன்கள் நீடிக்கும். அதில் முதலாவதாக

  • சோணைஅறை சுருக்கம்.
  • இதயவறை சுருக்கம்.
  • பூரணை இதய தளர்வு

சோணை அறை சுருக்கம்

சோணை அறை இதய அறைக்கு குருதி செல்லும் போது எஸ்.ஏ கணுவானது தூண்டப்படும். இரண்டு சோணையறைகளின் தசைப்படையில் பரவி செல்லும்.

இதனால் சோனையறையில் எஞ்சியுள்ள குருதியானது இதய வறைகளுக்குள் செல்லும் இதனால் சோணையறைகள் வெறுமை அடையும்.இது 0.1 செக்கன்கள் நீடிக்கும்.

இதய வறை சுருக்கம்

சோணைஅறை தசைகளில் மின்சமிக்கை ஏ வி கணுவை அடையும். சோணைஅறை இதய வறை கடத்தல் ஆனது ஏ.விகணுவில் தாமதிக்கப்படும். இத்தாமதத்தை தொடர்ந்து ஏ.வி கணுவில் இருந்து அதற்குரிய மின் தாக்கம் பிறப்பிக்கப்பட்டு கணத்தாக்கமானது ஏ.வி கட்டின் நார்கள் வழியாக இதயவறை தசைக்கு செல்லும்.

இச் சுருக்கத்தின் வழியாக அலையாக இதயத்தின் உச்சியில் இருந்து மேல் நோக்கி வெளியே பரப்பி செல்லும். இதனால் இது இதயம் சுருக்கமடையும். இதயவறை சுருக்கமானது தசம் ஒன்று செக்கங்கள் நீடிக்கும்.

பூரணை இதயத் தளர்வு

இது தசம்.நான்கு செக்கன்கள் நீடிக்கும். இதய வேலைகள் இரண்டும் குருதி இதயத்திற்கு திரும்பும் மேல்பெருநாளமும்,கீழ்பெருநாளமும் ஆக்சிஜன் குறைந்த குருதியை வலது சோணையறைக்கும் கொண்டு செல்லும்.

அதேவேளை நான்கு சுவாச நாளங்கள் மூலம் ஒட்சிசன் கூடிய குரு தியானது இடது சோணை அறைகளுக்கு கொண்டுவரப்படும். சோணை அறைகளின் அமுக்கம் இதய அறைகளின் அமுக்கத்தினை விட கூடுதலாக காணப்படும்.

இதனால் சோணையறை, இதய அறை வால்வுகள் திறக்கும். சிறிதளவு குருதி இதயவறையில் உயிர் பற்ற முறையில் பாயும்.

இப்போது நீங்கள் எல்லோரும் பூரணமாக இதயத்தின் கட்டமைப்பு அதனுடைய தொழில்பாடு மற்றும் இதய மின் கடத்தல்கள் போன்ற சகல விடயங்கள் பற்றியும் பூரணமான அறிவினை பெற்றிருப்பீர்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments