Sunday, April 19, 2026
Homeசுகாதாரம்நோயற்ற வாழ்வுக்கு கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த உணவுப்பழக்க வழக்கங்கள்

நோயற்ற வாழ்வுக்கு கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த உணவுப்பழக்க வழக்கங்கள்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற கூற்றுக்கிணங்க நாம் நோயின்றி வாழ வேண்டுமானால் எமக்கு அத்தியாவசியமாக காணப்படுவது ஆரோக்கியமான உணவு ஆகும் . உணவு இல்லையேல் எம்மால் உயிர் வாழ முடியாது . உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அடிப்படை தேவையான காணப்படுகின்றது . நாம் உண்ணும் உணவானது போசணை நிறைந்ததாக இருக்க வேண்டும் . நாம் உட்கொள்ளும் உணவுகள் இயற்கை உணவாக இருக்க வேண்டும் .

நாம் தினமும் மூன்று வேலைகள் உணவு உண்ண  வேண்டும் . அதாவது காலை, மதியம், இரவு என்றவாறு அமைய வேண்டும் . இதில் கட்டாயமாக காலை உணவும் இரவு உணவும் உண்ணுவது அவசியம் . நாம் ஏன் உணவு உட்கொள்ள வேண்டுமென்றால்

  1. எமது உடல் வளர்ச்சிக்கு
  2. நாம் நோயின்றி வாழ்வதற்கு
  3. எமது உடலுக்குத் தேவையான சக்தியை பெற்றுக் கொள்வதற்கு

போன்ற காரணங்களுக்காக நாம் கட்டாயமாக உணவு உண்ண வேண்டியிருக்கின்றது . நாம் உணவு உண்ணும் பழக்கத்தை நேரம் தவறி உண்ணுவோமேயானால் பல்வேறுபட்ட தீங்குகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் .

நாம் உண்ணும் உணவு கலப்புணவாக இருப்பது அவசியமாகும் . அதாவது ஒருவேளை உணவாவது கலப்புணவாக இருப்பது கட்டாயம் ஆகும் . கலப்பு உணவு என்பது நாம் உண்ணும் உணவில் அனைத்துப் போசணைக் கூறுகளும் சேர்ந்து இருப்பது கலப்பு உணவு ஆகும் . கலப்பு உணவு வேளைக்கு உகந்தது மதிய வேளையாகும் . எங்களால் மூன்று வேளையும் கலப்புணவை உண்ண முடியாது . எனவே நாம் மதிய உணவை பெரும்பாலும் கலப்புணவாக உண்பதே எமக்கு சிறந்ததாகும் .

நாம் உண்ணும் உணவில் பல போசணை கூறுகள் காணப்படுகின்றன . அவை அனைத்தும் எமக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றவை ஆகும் . போசணை கக் கூறுகளில் ஒன்றின் அளவு கூட குறைந்தால் எமக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உணவில் காணப்படும் போசணைக் கூறுகள் 

  1. மாப்பொருள் சத்து
  2. புரதச்சத்து
  3. கொழுப்பு சத்து
  4. விற்றமின்
  5. கனியுப்பு

போன்ற சத்துக்கள் உணவில் அடங்கியுள்ள மிக முக்கியமான சத்துக்களாகும் . இவை எமது உடலின் இயக்கத்துக்கு பெரிதும் உதவுகின்றன .

போசணைக் கூறுகளும் அவற்றின் தொழிற்பாடுகளும்

  • நாம் உண்ணும் உணவில் அதிகளவு மாப்பொருளினை சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது .
  • நான் உண்ணும் உணவில் அதிகளவு புரதத்தினை சேர்த்துக் கொள்வதினால் எமது உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது .
  • கொழுப்பு உணவினை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம் .
  • நாம் உண்ணும் உணவில் விற்றமின், கனியுப்பு காணப்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகம் பெற்றுக் கொள்ளலாம் .

போசணைக் குறைபாடுகளும் அதனால் ஏற்படும் நோய்களும்

  • புரதச்சத்து குறைபாட்டினால் குவாசியாக்கோர் நோய் ஏற்படுகின்றது .
  • விற்றமின் A குறைபாட்டால் மாலைக்கண் எனும் நோய் ஏற்படுகின்றது .
  • விற்றமின் B குறைபாட்டால் பெரிபெரி நோய் ஏற்படுகின்றது .
  •  விற்றமின் C குறைபாட்டால் ஸ்கேவி நோய் ஏற்படுகின்றது .
  • விற்றமின் D குறைபாட்டால் என் புருக்கி நோய் ஏற்படுகின்றது .
  • விற்றமின் E குறைபாட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது .
  • விற்றமின் K குறைபட்டால் குருதி உறையாத் தன்மை ஏற்படுகின்றது .
  • நாம் உண்ணும் உணவில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் மாயின் குருதிச் சோகை நோய் ஏற்படும் . அத்துடன் எமது உடல் சோர்வாக காணப்படும் .
  • நான் உண்ணும் உணவில் கல்சியம் குறைவாகக் காணப்படும் போது மற்றும் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும் .
  • அயடின் குறைபாடு காரணமாக எனக்கு எளிய கழலை நோய் ஏற்படுகின்றது . அத்துடன் ஞாபக சக்தி குறைவடைகின்றது .

நாம் உண்ணும் உணவுகளில் இவ் போசணைக் கூறுகளின் குறைபாட்டால் மேற்கூறப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றது . இதனால் எமது உடல் ஆரோக்கியமானது பாதிப்படைகின்றது .

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் நாகரிகம் வளர வளர எமது உணவிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் உணவுப் பழக்கமானது பல்வேறுபட்ட நோய்களையே தருகின்றது அதாவது துரித உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்கின்றோம் இவற்றை உண்பதால்

  1. அதிகரித்த உடற்பருமன்
  2. புற்றுநோய்
  3. நீரிழிவு நோய்
  4. இதய நோய்கள்
  5. உயர் ரத்த அழுத்தம்

போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவ் நோய்கள் தொற்றாத நோய்களுக்குள் அடங்குகின்றன . எனவே நாம் கடைகளில் சென்று சாப்பிடும் பழக்கத்தை விட்டு வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுதல் வேண்டும் . இதுவே எமக்கு சிறந்த வழிமுறையாகும் .

நாம் இன்று இயற்கை உணவுகளை உண்பதை தவிர்த்து உடன் உணவு வகைகள் அல்லது துரித உணவு வகைகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள், குளிர் பானங்கள் என்று பல்வேறுபட்ட உணவு வகைகளை இன்று அதிகம் உண்கின்றோம் . இதனால் எமக்கு பல தீமைகளே ஏற்படுகின்றன . அது மட்டுமின்றி நான் அசுத்தம் அடைந்த உணவுகளை எமக்குத் தெரியாமலேயே உண்கின்றோம் . இதுவும் எனக்கு தீங்குகளை ஏற்படுத்துகின்றது உணவானது பல்வேறு வழிகளில் மாசடைகின்றது .

உணவு அசுத்தம் அடையும் வழிமுறைகள் 

  1. சமைத்த உணவுகளை மூடி வைக்காத பொழுது அதற்குள் தூசு, அழுக்குகள் விழுவதன் மூலம் உணவு மாசடைகின்றது.
  2. உணவு சமைக்கும் சமையலறைக்குள் நாய், பூனை மற்றும் கரப்பான் பூச்சிகள் நடமாடி திரிதல் .
  3. சமைத்த உணவுகளின் மீது ஈக்கள் வைப்பதன் மூலம் உணவானது மாசடைகின்றது .
  4. உணவுகளில் பல்லிகள் விழுதல் அல்லது நக்குதல் மூலம் உணவு மாசடைகின்றது .
  5. அழுக்கடைந்த பாத்திரங்களில் உணவை சமைத்தல் மற்றும் உணவை பரிமாறுவதன் மூலம் உணவானது மாசடைகின்றது .
  6. காலாவதி திகதி முடிந்த உணவுப் பொருட்களை சமைப்பதன் மூலம் உணவு மாசடைகின்றது .

இது போன்ற பல்வேறு காரணங்களினால் நாம் சமைத்த உணவானது மேற்கூறப்பட்ட வழிகளின் மூலம் மாசடைகின்றது . இதனை தடுப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன . இதை நாம் பின்பற்றி உணவின் பாதுகாப்பை பேண வேண்டும் .

உணவு மாசடைவதை தடுக்கும் வழிமுறைகள்

  1. உணவு சமைக்கும் போது சுத்தமான பாத்திரங்களில் உணவுகளை சமைக்க வேண்டும் .
  2. சமைத்த பின் உணவுகளை உரிய முறையில் மூடி வைத்தல் வேண்டும் .
  3. சமையலறைக்குள் பிராணிகள் உள்நுழைவது அல்லது நடமாடுவதை தவிர்ப்பதன் மூலம் உணவு மாசடைவதை தவிர்க்க முடியும்
  4. உணவு சமைப்பவர் தன்னை சுய சுத்தம் செய்து கொள்ளுதல் வேண்டும் அது மட்டுமின்றி சமைக்கும் போது ஏப்ரன் அணிய வேண்டும் .
  5. உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதன் காலாவதி திகதியைப் பார்த்து வாங்குதல் வேண்டும் .
  6. உணவு சமைக்கும் ஒருவர் சுகாதார முறைப்படி உணவுகளை சமைத்தல் வேண்டும் .

மேற்கூறப்பட்டமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உணவு மாசடைவதை தடுக்க முடியும் இதனால் எங்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் .

உணவானது நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது . இதனால் நாம் உணவினை மிகவும் சுகாதார முறைப்படியும் ஆரோக்கியமான முறையிலும் சமைத்து உண்ணுதல் வேண்டும் . இவ்வாறு உண்பதன் மூலம் எனது உடல் நலத்தினை மேம்படுத்த முடியும் . நாம் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு உணவு பழக்க வழக்கங்கள் மிகவும் அவசியமானதாகும் .

RELATED ARTICLES

Most Popular

Recent Comments