Sunday, April 12, 2026
Homeசுகாதாரம்தலைமுடி மிக அடர்த்தியாக வளர்வதற்கு பாட்டி வைத்தியம் – சக்திவாய்ந்த இயற்கை தீர்வு

தலைமுடி மிக அடர்த்தியாக வளர்வதற்கு பாட்டி வைத்தியம் – சக்திவாய்ந்த இயற்கை தீர்வு

இன்று நாம் எல்லோருமே எமது உறுப்புக்களில் தலைமுடியினை முக்கியமான ஒன்றாக பாதுகாக்கின்றோம் .இது சிலருக்கு இயற்கையிலே மிக நன்றாக காணப்படும் . சிலருக்கு கருமை நிறமாக காணப்படும் .இன்னும் சிலருக்கு செம்மை நிறமாக காணப்படும். சிலருக்கு கட்டையாக காணப்படும். இன்னும் சிலருக்கு சுருட்டையாக காணப்படும் .மேலும் சிலருக்கு கம்பி போன்று காணப்படும்.

எனவே நாங்கள் எங்களது தலை முடிகளை மிகவும் பாதுகாப்பான தாகவும் ,ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்க வேண்டும். இதற்கு சில அறிவுரைகளை பழைய முன்னோர் கூறியுள்ளனர் .இவற்றை நாங்கள் வீட்டிலே செய்யக் கடியதாக அமையும். இப்போது அவை என்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தலைமுடி மிக அடர்த்தியாக வளர்வதற்கு பாட்டி வைத்தியம்.

கருவேப்பிலை இரண்டு பிடியும் வெந்தயம் ஐந்து ஸ்பூனும் எடுத்து அதனை நல்ல வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும் .அதனை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊற வைத்து கொள்ளவும். ஊற வைத்த எண்ணெயை தலைமுடிக்கு பூசிவர தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் காணப்படும்.

கொஞ்ச மருதாணி இலைகளை எடுத்து அதன் சாறுகளை அரைத்து எடுத்துக் கொள்ளவும் .அந்தச் சாறுகளை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி அவற்றை தலைமுடிக்கு தேய்த்துவர தலைமுடியின் இளநரை குறைவடையும் .அத்துடன் தலைச் சூடும் குறையும் .மேலும் முடி நீண்டு வளரும். தலைமுடி செம்மை நிறம் நீங்கி கருமை நிறம் அதிகரிக்கும்.

மருதாணி இலைகளை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து அதனை கை, கால் வலிகளுக்கு பூசும்போது வலித்தன்மை குறைவடையும். மேலும் மருதாணி இலையை அரைத்து நீண்ட நாட்கள் மாறாத புண்களுக்கு இடும்போது அந்த காயங்களும் ஆறிவிடும்.

ஒரு வாழைப்பழம் ,ஒரு முட்டை மஞ்சள் கரு ,ஒரு ஸ்பூன் தேன், அரைக்கப் பீர் ஆகியவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும் .பின்பு இந்த அரைத்த கலவையை தலைமுடியில் நன்கு பூசிக்கொள்ளவும் .

அதன் பிறகு துணியால் தலையைச் சுற்றி இரண்டு மணி நேரத்திற்கு கூடுதலாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஷாம்பு கொண்டு தலைமுடியை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனால் தலைமுடி வலிமையானதாகவும், அடர்த்தியானதாகவும் காணப்படும்.

வெந்தயம் 100 கிராம் ,பயத்தம் பருப்பு அரை கிலோ ,மற்றும் ஆவாரம்பூ என்பவற்றை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அரைத்த பவுடரை குளிப்பதற்கு முதலே வெந்நீரில் கரைத்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து அதன் பிறகு அந்த பேஸ்ட்டை வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு பூசி கழுவிக் கொள்ளவும் .தலைமுடி உதிர்வது நீங்கி கடும் நிற கூந்தல் ஏற்படும்.

நெல்லிக்காய்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் .அத்துடன் செம்பருத்தி இலை ஐந்து தொடக்கம் ஆறு மற்றும் தேங்காய் எண்ணெய் என்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலையை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும் .எண்ணெயை நன்கு சுடுகாட்டி கொள்ளவும் .நறுக்கிய பொடிகளை அந்த சூடுகாட்டிய எண்ணெயில் போட்டுக் கொள்ளவும்.

20 நிமிடம் வைத்து சூடு படுத்துங்கள். பின்பு ஆறவிடுங்கள்.எண்ணெய் ஆறிய பின்பு அவற்றை வடிகட்டி ஒரு போத்தலில் வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய எண்ணெய்யை ஒவ்வொரு நாளும் தலையில் தடவிக் கொள்ளுங்கள் .விரைவிலே மிக அடர்த்தியாக முடி வளரும்.

அடுத்ததாக அதிமதுரமும், கசகசாவும் சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றினை நன்றாக மிக்ஸியில் இட்டு அரைத்து தேங்காய் பாலில் நன்றாக குழைத்து தலையில் தடவிக் கொள்ளுங்கள். தலையில் ஊறிய பின்பு நன்றாக குளித்துக் கொள்ளுங்கள் .

விரைவில் முடி நன்கு செழித்து வளர்வதை காண முடியும். அதேபோல் மருதாணி இலை, ,செம்பருத்தி பூ இரண்டையும் நன்றாக அரைத்து நன்றாக கலக்கி தலையில் பூசி இரண்டு மணி நேரம் கழித்த பின்பு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டால் முடி கொட்டாது. பொடுகும் வராது .கூந்தல் மிருதுவாக காணப்படும்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி மில்க் க்ரீம் மற்றும் ஒரு மேசை கரண்டி கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த அந்தக் கலவையை தலையில் நன்கு தடவி ஊற விட்டு கொள்ள வேண்டும். 40 நிமிடங்கள் கழிந்த பின்பு ஷம்பு இட்டு தலையினை நன்கு குளிர்ந்த நீரினால் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட் மாக்ஸ வாரத்துக்கு ஒரு முறை இட்டு பயன்படுத்தி வந்தால் அந்த பேஸ்டில் உள்ள புரோட்டின் தலை முடிக்கு கிடைக்கும். முடி நன்கு பொலிவோடு இருக்கும்.

அதேபோல எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால் தலை முடிக்கு நல்ல போசாக்கு கிடைக்கும் .மூன்று மேசை கரண்டி தேங்காய் எண்ணெய்க்கு மூன்று மேசை கரண்டி எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு உங்கள் தலைமுடிக்கு நன்றாக தேய்த்து கலையை நன்கு தலையை நன்கு மசாஜ் செய்ய வேண்டும் .20 நிமிடங்களுக்கு பின்பு தலைமுடியை நீரினால் அலச வேண்டும்.

ஒரு கைப்பிடி வெந்தயம் ,ஒரு தேக்கரண்டி சீரகம் இரண்டையும் இரவில் ஒரு டம்ளரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் .அடுத்த நாள் இந்த ஊரிய கலவையிலிருந்து ஊறிய கலவையையும் சிறிது கறிவேப்பிலையையும் கலந்து மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு நன்றாக தேய்த்து தலை முடியை அலசுதல் வேண்டும். சம்பு பயன்படுத்த தேவையில்லை. ஒரு முறை செய்தால் முடி அடர்த்தியாக வளரும் ஒருபோதும் கொட்ட மாட்டாது.

அடுத்து கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு அரைத்து அதனை நல்ல தயிருடன் சேர்த்து கலந்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும் .

10 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் தலையை அலசி கொள்ளுதல் வேண்டும் .இதன் மூலம் முடி உதிர்வது குறைக்கப்பட்டு முடியானது நன்கு கருமையாக வளரும்.

நெல்லிக்காய் சிலவற்றை எடுத்து வெயிலில் காயவைத்து எப்படி செய்து பொடி செய்து பவுடர் ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும் .

தயார் செய்த பவுடரை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தலை மயிருக்கு பூசிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தலை முடி கருமையாக வளரும்.

மேலும் இரண்டு மேசை கரண்டி எலுமிச்சைச் சாறையும் இரண்டு மேச கரண்டி விளக்கு எண்ணையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .பின்பு தலை முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை நீரினால் அலசுதல் வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் தலைமுடி உதிர்தல் பிரச்சனையானது போதும் போதும் என்று ஓடிப் போய்விடும்.

மேல் கூறிய அனைத்துமே வீட்டில் இலகுவாக செய்யக்கூடிய முறைகளாகும் .இவற்றினை நாம் இயன்ற அளவு செய்து எமது தலைமுடி பராமரிப்பினை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments