முதலுதவி ஆனது ஒருவர் விபத்திலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்களில் ஒருவரது உடல் பாதிக்கப்படும்போது உடனடியாக சிகிச்சைகளை அளிப்பதற்கான முறையாகும். இந்த முதலுதவி சிகிச்சையானது ஒருவருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை ஆகும். அதாவது குறித்த நபருடைய உடல்நிலை மேலும் மோசமாக மாறாமல் இருக்க வழங்கப்படும் சிகிச்சை.
முதலுதவியின் முக்கியத்துவம்
முதலுதவியானது சகல மனிதர்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு அடிப்படையான நடவடிக்கையாகும். மனிதர்களின் உயிர் பாதுகாப்புக்கு பெருமளவில் இந்த சிகிச்சை உதவியாக இருக்கும். நாம் இந்த சிகிச்சையினை சரியான நேரத்தில் குறித்த நபருக்கு முறையாக வழங்குவதன் மூலம் அவர்கள் உயிர்களை காப்பாற்ற கூடும். முதலுதரியின் மூலம் நாம் பாதிக்கப்பட்டவரின் உயிரைப் பாதுகாப்பது அவருக்கு மேலும் காயங்கள் ஏற்படுவதை தடுப்பது போன்ற செயற்பாடுகள் மூலம் குறித்த குறித்த நபருடைய உயிரை காப்பாற்றலாம்.
முதலுதவியின் முக்கிய அம்சங்கள்
- பாதிக்கப்பட்ட நபரின் காயங்களை தவிர்த்தல், உயிரை காப்பாற்றுதல் அதனுடன் குறித்த நபருக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுத்தல்.
- அடிப்படை முதலுதவி தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருத்தல்.
- முதலுதவி அளிக்கும் முன் முதலுதவி தொடர்பான அடிப்படைகளை கற்றுக் கொள்வது அவசியம்.
- தவறான முதலுதவி பெரிய அளவிலான உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடும்.
- முதலுதவி அளிக்கும்போது அச்சமின்றி செயல்படுதல்.
முதலுதவி அளிப்பதற்கான அடிப்படை செயல்முறைகள்
உலக அளவில் முதலுதவி அளிக்கும் முன் DRABC என்னும் முதலுதவி அடிப்படை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனுடைய முழுமை வயான விளக்கம்,
- Danger ஆபத்து – முதலுதவி அளிக்கும் முன் உங்களுடையதும் பாதிக்கப்பட்டவர்களுடையதும் பாதுகாப்பினை உறுதி செய்தல்.
- Response பதில் – முதலுதவி அளிக்கும் முன் பாதிக்கப்பட்ட நபர் சாத்தியமான செய்கை அல்லது பதிலினை அளிக்கின்றாரா என அறிய வேண்டும்.
- Airway மூச்சுக்குழாய் – பாதிக்கப்பட்ட அவருடைய சுவாசக் குழாய் அல்லது நூற்றுக்குழாய் திறந்து உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- Breathing மூச்சு விடுதல் – பாதிக்கப்பட்ட நபர் சீராக அல்லது சாதாரணமாக மூச்சு விடுகின்றாரா என்பதனை சரிபார்த்துக் கொள்ளல் வேண்டும்
- Circulation இரத்த ஓட்டம் – பாதிக்கப்பட்ட நபருக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கின்றதா என்பதை நன்றாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முதலுதவியின் போது பொதுவாக கையாளப்படும் வழிகாட்டுதல்கள்
- மூச்சுத் திணறல் அல்லது ஹிம் லீச் முறைமூச்சுக்குழாயில் ஏதாவது பொருட்கள் சிக்கியிருந்தால், கையை முழுமையாக படித்து அதிரடியாக மண்டை ஓட்டத்தின் கீழ் சுருக்க வேண்டும்.
- காயங்களுக்கான முதலுதவி
- பாதிக்கப்பட்ட நபருக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பின் காயம் உள்ள இடத்தை சுத்தமாக கழுவி அதனை இரத்தம் மேலும் போகாதவாறு அழுத்துதல்.
- காயம் மட்டும் பகுதியினை இதய மட்டத்திற்கு மேலாக உயர்த்திப் பிடித்தல்.
- காயத்திற்கு மருந்து கட்டுதல்.
- குறித்த நபரினை படுக்க வைத்தல்
- மூச்சுத் திணறல் மற்றும் இதய நெறிப்பு CPRபாதிக்கப்பட்ட நபர் சுயமாக மூச்சு விட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால் அவருக்கு CPR Cardiopulmonary Resuscitation எனப்படும் முறையை செய்ய வேண்டும். இந்த முறையானது மூன்று நிலைகளைக் கொண்டது.
- C Compression பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் அழுத்தம் கொடுப்பது.
- A Airway அவருடைய சுவாசக் குழாயை அல்லது மூச்சு குழாயை திறக்க நடவடிக்கை எடுத்தல்.
- B Breathing செயற்கையான மூச்சு விடுதல்
முதலுதவிக்கான பயன்பாடுகள்
- இயற்கை இடர்கள்
- வீதி விபத்து
- வீட்டு விபத்துக்கள்
- வேலை இடங்களில் ஏற்படும் விபத்துக்கள்
முதலுதவி தொடர்பான விழிப்புணர்வு
- பாடசாலைகளில் முதலுதவி தொடர்பான பயிற்சிகளினை அறிமுகப்படுத்துதல்.
- தொழில் இடங்களில், சமூகங்களில் முதலுதவித தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல்.
- குழந்தைகளுக்கு முதலுதவி தொடர்பான அடிப்படை கல்வினை வழங்குதல்.
முதலுதவி தொடர்பாக மருத்துவர்களின் வழிகாட்டுதல்
எப்போதும் முதலுதவி அளித்தவுடன் நோயாளியை விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் அவசியமாகும். முதலுதவி நோக்கம் மருத்துவ சிகிச்சைக்கு முன் நோயாளியின் நிலைமையை சீராக வைத்திருக்க உதவுவதல் ஆகும்.
முதலுதவி என்பது சகல மனிதர்களும் மனித நேயத்தின் அடிப்படை இல் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை செயலாகும். இந்த முதலுதவி செயல்கள் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியதும் அனைவரும் அறிந்து வைக்கக் கூடியதும் ஆகும். தேவை ஏற்படும் இடங்களில் அச்சமின்றி தைரியமாக செயல்பட்டால் ஏராளமான உயிர்களை நாமும் காப்பாற்ற முடியும்.
