உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றி அமையாத ஒன்றாக நீர் காணப்படுகின்றது. இதனாலேயே திருவள்ளுவர் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று கூறுகிறார். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறையுள் மட்டும் நீர் அவசியமாக காணப்படுகின்றது. உணவு, உடை இல்லை என்றாலும் அதனை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
ஆனால் நீர் இல்லையேல் எம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நீரானது ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகக் கருதப்படுகின்றது. எனவே நாம் நீரின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருப்பது அவசியம் ஆகும்.
புவியின் மேற்பரப்பில் 71% நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் இரண்டு சதவீதம் நாம் பயன்படுத்தும் நன்னீராக காணப்படுகின்றது. நன்னீரானது மிக க் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இதனால் நாம் பயன்படுத்தும் நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
நீரானது மூன்று நிலைகளில் காணப்படுகின்றது.
-
- திண்ம நிலை
- திரவ நிலை
- வாயு நிலை
திண்ம நிலை என்பது வெப்பநிலை குறைவடையும் பொழுது திரவ நிலையில் இருக்கும் நீரானது திண்ம நிலைக்கு மாறுகின்றது. இதையே நாம் பனிக்கட்டி என்று கூறுகின்றோம். புவியின் மொத்த மேற்பரப்பில் நீரானது உறைந்த நிலையிலே காணப்படுகின்றது. பனிக்கட்டியானது உயர்ந்த மலைகளிலும் பனிப்பாறைகளிலும் துருவப்பிரதேசங்களிலும் பனிக்கட்டி அதிக அளவில் காணப்படுகின்றது.
திண்ம நிலையில் இருக்கும் பனிக்கட்டியானது அதிக வெப்பம் காரணமாக உருகி திரவ நிலைக்கு மாறுகின்றது. இத்திரவ நிலை நீரானது கடல், ஆறு, குளம், ஏரி, நீரோடைகள் மற்றும் நிலத்தடி நீர்களில் காணப்படுகின்றது. இந்த திரவ நிலை நீரானது அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.
அடுத்து திரவ நிலையில் இருக்கும் நீரானது நீராவியாகி வாயு நிலைக்கு மாறுகின்றது. அதாவது கடலில் இருக்கும் நீரானது நீராவியாக மாறி வாயு நிலையில் நீர் வளிமண்டலத்திற்கு அகத்துறிஞ்சப்படுகின்றது. பின்னர் அகத்திஞ்சப்பட்ட நீராவியானது குளிர்த்த ப்பட்டு மீண்டும் மழையாக வருகின்றது. மழையாக நீர் பொழிவதால் விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகின்றது. இதனால் பயிர் செய்கைகள் செழித்து நாடானது தன்னிறைவினை அடைவதற்கு பெரிதும் உதவுகின்றது.
ஆனால் நாம் நீரின் பயன்களை பற்றி அறியாது அந்த நீரை பல வழிகளில் சுத்தமடைய செய்கின்றோம். இதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் அற்று போவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது. நீர் இல்லையேல் எந்த உயிரினங்களும் உயிர் வாழ முடியாது. என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எமது எந்தவொரு செயற்பாடும் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லாதவாறு அமைய வேண்டும்.
நீர் மாசடையும் வழிமுறைகள்
- மனிதர்கள் நீருக்குள் குப்பைக் கூளங்களைக் கொட்டுகின்றனர். இதனால் நீரானது மாசடைகின்றது.
- எலியின் சிறுநீரகமானது நீரில் கலப்பதன் மூலம் நீரானது மாசடைகின்றது.
- நாம் சமைக்கும்போது வரும் கழிவுகளை உரிய வகையில் அகற்றாது நீருக்குள் வீசுதல்.
- நாம் பாவித்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கு பொருட்களை நீருக்குள் வீசுவதன் மூலம் நீர் மாசடைகின்றது.
- தொழிற்சாலை கழிவுகள் நீருக்குள் கலத்தல்.
- அதிக மழை காரணமாக வெள்ள நீர் நிலத்தடி நீரோடு கலப்பதால் நீர் மாசடைகின்றது.
- விவசாயிகள் அதிக விளைச்சலுக்காக இரசாயன பதார்த்தங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீருக்குள் இரசாயன பதார்த்தம் கலப்பதால் நீர் மாசடைகின்றது.
- ஆற்று நீர்கள் மற்றும் நீரோடைகளில் விலங்குகளை குளிப்பாட்டுவதன் மூலம் நீரானது மாசடைகின்றது.
இதுபோன்ற பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக நீரானது மாசடைகின்றது. இதனை தடுப்பதற்கு பல்வேறு வழி வகைகள் காணப்படுகின்றன.
நீர் மாசடைவதை தடுக்கும் வழிமுறைகள்
- அதிகளவு இரசாயன பதார்த்தங்களை பாவிப்பதை தவிர்ப்பதன் மூலம் நீரை பாதுகாக்க முடியும்.
- ஆறு மற்றம் குளங்களில் விலங்குகளை குளிப்பாட்டுவதை நிறுத்துவதன் மூலம் நீர் மாசடைதலைத் தடுக்க முடியும்.
- கிணற்று நீருக்குள் அடிக்கடி குளோரின் இடுவதன் மூலம் நீரை மாசடையாது பாதுகாக்கலாம்.
- மலசல கூடம் அமைப்பதற்கு நிலத்தடி நீருக்கு அருகில் அமைக்காது உரிய அளவு திட்டங்களுக்கு ஏற்ற அமைத்தல் வேண்டும்.
- கிணற்றுக்குள் குப்பைகள் விழாதவாறு கிணற்றை மூடி நெற் அடித்தல் வேண்டும்.
- தொழிற்சாலை கழிவு நீர்களை சுத்திகரித்த பின்னர் நீருடன் கலக்க விடுதல். இதன் மூலம் நீர் மாசடைவதை தடுக்க முடியும்.
- எமது தேவைக்காக பெற்ற நீரை திறந்து விடாது அதனை மூடி வைத்தல் வேண்டும்.
- அதிகளவு பிளாஸ்டிக்கு, பொலித்தீன் பாவனைகளை குறைப்பதன் மூலம் நீர் மாசடைவதை தடுக்க முடியும்.
- நீருக்குள் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீர் மாசடைவதை எம்மால் தடுக்க முடியும்.
அசுத்தமடைந்த நீரை அருந்துவதனால் ஏற்படும் நோய்கள்
நாம் அசுத்தமடைந்த நீரை அருந்துவதன் மூலம் பல்வேறுபட்ட நோய்களுக்கு உள்ளாகின்றோம். அதாவது மழைக்காலங்களில் இது போன்ற பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகின்றோம்.
- வாந்தி பேதி அல்லது கொலரா
- வயிற்றோட்டம் அல்லது கழிச்சல் நோய்
- நெருப்பு காய்ச்சல்
- மஞ்சட் காமாலை
போன்ற தொற்றும் நோய்களே அதிக அளவில் ஏற்படுகின்றன இதனால் எமது உயிருக்கு கூட அச்சுறுத்தலாக இவ் நோய்கள் அமைகின்றது. எனவே நாம் நீரை பாதுகாத்து எமது உயிரையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
அசுத்தமடைந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் தீமைகள்
அசுத்தமடைந்த நீரினை அருந்துவதால் மட்டும் நோய்கள் ஏற்படாது. அவ் நீரை பயன்படுத்தி குளிப்பதன் மூலமும் பல்வேறுபட்ட நோய்களுக்கு உள்ளாகின்றோம்.
- மழைக்காலங்களில் வெள்ள நீர்களில் நடந்து செல்வதால் கால்களில் சொறி சிரங்கு நோய்கள் ஏற்படுகின்றது.
- மாசடைந்த நீரில் குளிப்பதால் தோள்களில் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
- மழைக்காலங்களில் வெள்ள நீர்களில் எலிகளினுடைய சிறுநீரகங்கள் கலப்பதனால் அவ்நீரை பயன்படுத்துவதன் மூலம் எலிக்காய்ச்சல்கள் ஏற்படுவதற்கு ஏதுவாக அமைகின்றது.
- அசுத்தம் அடைந்த நீரில் குளிப்பதன் மூலம் நுண்ணங்கி தொற்றுக்களுக்கு உள்ளாகி கண் நோய்கள் ஏற்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட நோய்கள் அசுத்தம் அடைந்த நீரினை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்றது.
நீரானது மனிதனது வாழ்வியல் சடங்குகளுடன் பின்னிப்பிணைந்ததாக காணப்படுகின்றது குறிப்பாக இந்துக்களுடைய சடங்குகளை எடுத்துக் கொண்டோமேயானால் நீரின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. அதாவது திருமண நிகழ்வின்போது மணமகனை தோழன் கால்கழுவி வரவேற்கும் நிகழ்வு நீருடன் தொடர்பு பட்டதாக காணப்படுகின்றது.
ஒரு நிகழ்வினை செய்யும் போது நீர் நிரம்பிய நிறைகுடம் ஒன்றினை வைத்து ஆரம்பிப்பது இந்துக்களின் சிறப்பு அம்சமாகும். இதனுடனும் நீர் முக்கியம் பெறுகின்றது. மேலும் திருமணச் சடங்குகளின் போது நீர் குடத்திற்குள் மோதிரத்தினை இட்டு அதனை மணமக்களை எடுக்கச் செய்தல்.
மற்றும் மணமக்களை வாசனை நீரினால் நீராட்டுவதற்கும் இந்த நீரின் பங்கு மிகவும் துணை புரிகின்ற ஒன்றாக காணப்படுகின்றது. இவ்வாறு ஏனைய மதங்களிலும் உள்ள சடங்குகளில் நீரின் முக்கியத்துவம் சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.
இதனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நீரானது மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது. எனவே அந்த நீரினை நாம் அசுத்தம் அடையாது பாதுகாத்து எமது இளம் சமுதாயத்தினருக்கு ஆரோக்கியமான வாழ்வு கிடைப்பதற்கு உதவி செய்ய வேண்டும். அது மட்டுமின்றி வரையறுக்கப்பட்ட வளமாக இருக்கும் இந்த நீரினை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.
