சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் என்பது 12 ஆசனங்களின் ஓட்ட வரிசையை உள்ளடக்கிய உடற்பயிற்சியை குறிப்பதாகும் .
சூரிய நமஸ்காரத்தினை நாம் காலையில் செய்வது மிகவும் சிறந்ததாகும் .
இது 12 படிநிலைகளை கொண்டுள்ளது .
சூரிய நமஸ்கார செயற்பாடுகள் தினமும் பாடசாலையில் மாணவர்களுக்கு காலையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சியாகும் .
புதிதாக சூரிய நமஸ்காரம் செய்யும் ஒருவர் அதன் 12 படிநிலைகளையும் செய்யக்கூடாது.
அவர் மூன்று தொடக்கம் ஆறு வகையான படிநிலைகளை மாத்திரமே செய்தல் வேண்டும்.
பின்னர் படிப்படியாக 12 படிநிலைகளையும் செய்ய முடியும்
சூரிய நமஸ்காரம் செய்யும் போது வெறும் தரையில் செய்தல் கூடாது.
நிலத்தில் விரிப்பு ஒன்றை விரித்த பின்னர் சூரிய நமஸ்காரம் செய்தல் வேண்டும் .
சூரிய நமஸ்காரத்தின் 12 படிநிலைகளும்

சூரிய நமஸ்காரச் செயற்பாட்டின் முக்கியத்துவங்கள்
- சூரிய நமஸ்காரச் செயற்பாடு செய்வதினால் நோயற்ற ஆரோக்கியமான நல்வாழ்வு கிடைக்கின்றது .
- இச் செயற்பாட்டினை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் துரிதமாகவும் விரைவாகவும் வேலை செய்யும் ஆற்றல் கிடைக்கும் .
- சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலை நன்கு வளைத்து வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கிறது .
- இச் செயற்பாட்டினை செய்வதன் மூலம் அமைதியான, மகிழ்ச்சியான நல் வாழ்க்கை அமைகின்றது .
- மாணவர்களுக்கு படித்தவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு இது பெரிதும் உதவுகின்றது .
- சூரிய நமஸ்காரம் செய்வதனால் உடல் ஆரோக்கியம் கிடைப்பது மட்டுமின்றி மன ஆரோக்கியமும் கிடைக்கின்றது .
சூரிய நமஸ்காரம் செயற்பாடு செய்யக்கூடாதவர்கள்
- கர்ப்பிணி பெண்கள்
- உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
- மூட்டு வலி உள்ளவர்கள்
- தலை சுற்று உள்ளவர்கள்
- இதய நோய் உள்ளவர்கள்
- கழுத்து வலி உள்ளவர்கள்
- முள்ளந்தண்டு பிரச்சினைகள் உள்ளவர்கள்
மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள்

மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் ஐந்து படி நிலைக்குள் அடங்குகின்றன .
- உடலை தளர்த்துதல்
- உள்ளத்தை தளர்த்துதல்
- திட சித்தம்
- பிரார்த்தனை
- உதிப்பு
உடலை தளர்த்துதல்
- சௌகரியமான இடத்தில் அமருதல் .
- கண்களை மெது மெதுவாக மூடுக .
- கை கால்களை மெதுவாக தளர்த்துதல் .
- கால் விரல்கள், நெஞ்சு, கணுக்கால்கள், வயிறு, இடுப்பு என்பவற்றை தளர்த்துதல் .
- உள்மூச்சு, வெளி மூச்சு வாங்குதல் .
- சுவாசிக்குக .
போன்ற செயற்பாடுகள் உடலை தளர்த்துதல் படிநிலைக்குள் அடங்குகின்றன .
உள்ளத்தை தளர்த்துதல்
- நான் மனதை தளர்த்திக் கொள்கிறேன் .
- என்னுடைய மனம் இதமாக இருக்கின்றது .
- தூரத்தே எழும் ஒலிகளை நன்றாக செவிமடுக்கின்றேன் .
- சுற்றுப்புறத்தில் எழும் பறவைகளின் ஒலிகளை நன்றாக செவிமடுக்கின்றேன் .
- சூழலில் வீசும் காற்றின் ஒலிகளை செவிமடுக்கின்றேன் .
- சூழலில் இருக்கின்ற மரம், செடி, கொடிகளின் அசைகின்ற ஒலிகளை செவிமடுக்கின்றேன் .
- எனக்கு அருகில் கேட்கும் ஒலிகளையும் செவிமடுக்கின்றேன் .
- நான் சுவாசிக்கும் காற்றின் ஒலிகளையும் நன்றாக செவிமடுக்கின்றேன் .
- எனது இதயத் துடிப்பின் ஒலிகளையும் நன்றாக செவிமடுக்கின்றேன் .
- கவலைப்படும் உள்ளத்தை விடுத்து நினைவுகளிலிருந்து நீக்குவோம் .
- எண்ணங்களை தளர்த்துகின்றேன் .
- எனது உள்ளம் அமைதி பெறட்டும் .
- எனது உள்ளம் இதம் பெறட்டும் .
- எனது உள்ளம் இவற்றை உணரட்டும்.
- போன்ற செயற்பாடுகள் உள்ளத்தை தளர்த்துதல் செயல்பாட்டுக்குள் உள்ளடங்குகின்றன .
திட சித்தம்
- நான் எனது உள்ளத்தை அமைதி படுத்த முடிகின்றது .
- நான் பெற்ற மன அமைதியை எனது நண்பர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றேன் .
- நான் பெற்ற மன அமைதியை எனது பாடசாலை ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து அளிக்கின்றேன் .
- நான் பெற்ற மன அமைதியை எனது குடும்பத்தினரும் பெற பகிர்ந்து அளிக்கின்றேன் .
- நான் பெற்ற உள்ளத்தின் அமைதியை ஏனையோரும் உணரத்தக்க வகையில் நடந்து கொள்வேன் .
- நான் வகுப்பிற்கு ஒளியாவேன் .
- நான் பாடசாலைக்கு ஒளியாவேன் .
- நான் வீட்டிற்கு ஒளியாவேன்.
- நான் ஆசிரியர் சொற்படி நடந்து கல்வியில் வெற்றி பெற்றே ஆகுவேன்.
- நான் எனது வீட்டிற்கும் குடும்பத்திற்கு நற்பண்பு உள்ள நல்ல பிள்ளையாவேன் .
- நான் எனது நாட்டிற்கு நல்ல பயனுள்ள ஒருவன் ஆவேன் .
- நான் உலகிற்கு நல்ல பயனுள்ள ஒருவன் ஆவேன் .
பிரார்த்தனை
- நான் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றேன் .
- எனது உள்ளம் அமைதி அடைவதால் கிடைக்கும் நிம்மதியை உணரட்டும்
- எனது உள்ளத்தின் அமைதியை எனது நண்பர்களின் உள்ளங்களும் உணரட்டும்
- எனது உள்ளத்தின் அமைதியை எனது குடும்பத்தார்களின் உள்ளங்களும் உணரட்டும்
- எனது உள்ளத்தின் அமைதியை எனது தம்பி தங்கைகளின் உள்ளங்களும் உணரட்டும்
- எனது உள்ளத்தின் அமைதியை எனது பாடசாலையில் உள்ள அனைவரது உள்ளங்களும் உணரட்டும்
உதிப்பு
- நான் இவ்வாறு மலர்கின்றேன் .
- எனது உள்ளம் அடக்கமாக உள்ளது .எனது உள்ளத்தால் உணரப்படும் நிம்மதியை எனது நண்பர்களுக்கு என்னால் பகிர முடியும் .
- எனது உள்ளத்தால் உணரப்படும் நிம்மதியை எனது குடும்பத்தாருக்கும் என்னால் பகிர முடியும் .
- எனது உள்ளத்தால் உணரப்படும் நிம்மதியை எனது அண்மை நண்பர்களுக்கு பகிர முடியும் .
- நான் எனது நண்பர்களுக்கு ஒளி விளக்காவேன் .
- நான் எனது குடும்பத்தார்களுக்கு ஒளி விளக்காவேன் .
- நான் எனது வகுப்பிற்கு ஒளிவிளக்காவேன் .
- நான் எனது பாடசாலைக்கு ஒளிவிளக்காவேன்.
- நான் ஒளிவிளக்காக மாறி உலகத்திற்கு ஒளி யூட்டுவேன்
இதன் பின்னர் மெல்ல மெல்ல கண்களைத் திறந்து அமைதியாக எழுந்து வகுப்பறைக்கு செல்லுதல் வேண்டும்.
