Sunday, April 19, 2026
Homeகல்விகட்டுரைதகவல் தொடர்பாடல் சாதனங்களும் அவற்றின் நன்மை தீமைகளும் - ஒரு சிறப்பு பார்வை

தகவல் தொடர்பாடல் சாதனங்களும் அவற்றின் நன்மை தீமைகளும் – ஒரு சிறப்பு பார்வை

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் மனிதனையும் தகவல் தொடர்பு சாதனங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு மனிதன் தகவல் தொடர்பு சாதனத்துடன் மூழ்கிப் போய் காணப்படுகின்றான். ஆரம்பகாலத்தில் உலகமானது பரந்துபட்டதாகக் காணப்பட்டது.ஆனால் தற்போது உலகமானது மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது.உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் ஒரு நொடிப்பொழுதில் இருந்த இடத்திலிருந்தே செய்தியைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தகவல் தொடர்பாடல் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது.

தகவல்/தகவல் தொடர்பாடல்

பிறர் அறியும் வகையில் கூறப்படும் செய்தியே தகவல் எனப்படும்.

தகவல் வழங்கும் மற்றும் தகவல் பெறும் இடங்கள் இரண்டையும் இணைப்பது தகவல் தொடர்பாடல் ஆகும்.

ஆரம்ப கால தகவல் தொடர்பாடல்

ஆரம்பகால கட்டத்தில் மனிதன் தகவல்களைப் பரப்புவதற்கு மிகச் சிரமப்பட்டான். அதாவது அரசர்கள்,நாட்டு மக்கள்கள் பின்வரும் முறைகளில் தகவல்களைப் பரிமாரிக்கொண்டனர்.

தகவல் தொடர்பாடல் சாதனங்களும் அவற்றின் நன்மை தீமைகளும் - ஒரு சிறப்பு பார்வை
தகவல் தொடர்பாடல் சாதனங்களும் அவற்றின் நன்மை தீமைகளும் – ஒரு சிறப்பு பார்வை

உதாரணம்:

  • முரசறைதல்
  • கூக்கிரலிடல்
  • தீ மூட்டுதல்
  • புறா மூலம்
  • குதிரை வீரன் மூலம்
  • ஓட்ட வீரன் மூலம்
  • புகை மூட்டுதல்

தகவல் தொடர்பாடலின் வளர்ச்சி

ஆரம்ப காலகட்டத்தில் இருந்த தகவல் தொடர்பாடல் முறையானது படிப்படியாக வளர்ச்சியடைந்து பின்னர்

  • கடிதம் மூலம் தகவல் தொடர்பு
  • பட வழி தகவல் தொடர்பு
  • அச்சு வழித் தகவல் தொடர்பு
  • இணைய வழி தகவல் தொடர்பு
  • இலத்திரனியல் தகவல் தொடர்பு

எனப் பல வழிகளில் தகவல்களைப் பரிமாரக் கூடியதாக தகவல் தொடர்பாடல் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மேலும் செய்தி வழங்கும் ஊடகங்களைஇரண்டு வகையாகப்பிரித்து நோக்கலாம்.

  • அச்சு ஊடகம்
  • இலத்திரனியல் ஊடகம்

அச்சு ஊடகம்

எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஊடகங்களே அச்சு ஊடகங்கள் எனப்படும்.இவற்றை கண்களால் மட்டுமே பார்த்து செய்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணம்

  • பத்திரிகை
  • கடிதம்
  • துண்டுப்பிரசுரம்
  • பதாதைகள்
  • அறிவித்தல்கள்
  • நூல்கள்

இலத்திரனியல் ஊடகம்

இலத்திரனியல் சுற்றுக்களைக் கொண்ட கருவிகள் மூலம் செய்தியைப் பெற்றுக் கொள்ளக்கூடியது இலத்திரனியல் ஊடகம் எனப்படும்.

1.செவிப்புல சாதனம்

இவை கட்புல ,செவிப்புல,கட்புல செவிப்புல சாதனங்கள் என மூன்று வகையாகப் பிரித்து நோக்கப்படுகின்றது.

  • கட்புல சாதனம்
  • இணையம்
  • கடிதம்
  • துண்டுப்பிரசுரம்
  • தொலைநகல்

2.செவிப்புல சாதனம்

  • வானொலி
  • ஒலிபெருக்கி
  • தொலைபேசி

3.கட்புல,செவிப்புல சாதனங்கள்

  • தொலைக்காட்சி
  • சினிமா
  • பல்லூடகத் தொகுதி

இவ்வாறு தகவல் தொடர்பாடல் சாசனங்களின்  வளர்ச்சியானது படிப்படியாக வளர்ந்து அதி நவீன தொழிநுட்பமாக மாறியுள்ளது.

தகவல் தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சியும் அதன் தாக்கமும்

தகவல் தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சி பல்வேறு துறைகளில் அதன் தாக்கத்தினை செலுத்தி உள்ளது.

உதாரணமாக

  • மருத்துவத்துறை
  • கல்வித்துறை
  • போக்குவரத்து துறை
  • விஞ்ஞானத்துறை
  • விளையாட்டுத்துறை
  • அரசியல்
  • கைத்தொழில் துறை
  • வணிகத்துறை

என்பதில் பெரிய அளவிலான வளர்ச்சியினை இத்தகவல் தொடர்பாடல் சாதனங்கள் ஏற்படுத்தி உள்ளன.

மருத்துவத்துறை

  • நோய்களை கண்டறிவதற்கு
  • மரவணு பகுப்பாய்வு
  • புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கு
  • நோயாளர் தரவு சேகரிப்பு
  • ரோபோடிக் அறுவை சிகிச்சை

கல்வித்துறை

  • செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயிற்சி
  • ஆசிரியர்களின் நிர்வாக பணிகள்
  • மாணவர்களின் தரவுகளை சேகரிப்பதற்கு
  • மாணவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு
  • ஆசிரியரின் கற்பித்தல் செயல்பாட்டை இலகுபடுத்துவதற்கு
  • தொலைதூர கற்கைக்கு உதவுகின்றது .
  • மாணவர்களின் புள்ளிப் பகுப்பாய்வினை மேற்கொள்ளுவதற்கு
  • மாணவர்களின் கட்டலில் உள்ள ஆர்வத்தினை அதிகரிக்க செய்வதற்கு

போக்குவரத்து துறை

  • தானியங்கி கார்கள்
  • மனித தவறுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு
  • போக்குவரத்தினை ஒழுங்கு அமைப்பதற்கு
  • பொதுப் போக்குவரத்தினை திட்டமிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது.

விஞ்ஞானத்துறை

  • பாரியளவிலான தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு
  • புதிய கருதுகோள்களை உருவாக்குவதற்கு
  • காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை கணிக்க உதவுகின்றது.
  • புவி அபாயம் பேரிடர்கள் நில நடுக்கங்கள் எரிமலை வெடிப்புகள் போன்றவற்றை கண்காணிக்க உதவுகின்றது.

வணிகத்துறை

  • விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் கருவிகள் வாடிக்கையாளர் நடத்தையை பகுப்பாய்வு செய்து விளம்பரங்கள் செய்ய உதவுகின்றன.

    தகவல் தொடர்பாடல் சாதனங்களும் அவற்றின் நன்மை தீமைகளும் - ஒரு சிறப்பு பார்வை
    தகவல் தொடர்பாடல் சாதனங்களும் அவற்றின் நன்மை தீமைகளும் – ஒரு சிறப்பு பார்வை
  • எதிர்கால விற்பனையை துல்லியமாக கணிக்க உதவுகின்றது.
  • தானியங்கி வாடிக்கையாளர் சேவை
  • பங்குச்சந்தையில் தரவு பகுப்பாய்வு செய்து புதிய முதலீட்டுகளை இனங்கான உதவுகின்றன.

விளையாட்டுத் துறை

  • ஏஐ(AI ) மூலம் இயங்கும் பயிற்சி திட்டங்கள்
  • வீரர்களின் செயல் திறனை பகுப்பாய்வு செய்து மேம்பாட்டு பகுதிகளை அடையாளம் காணுதல்.
  • எதிரணியின் வியூபங்களை பகுப்பாய்வு செய்து சிறந்த வியூபங்களை உருவாக்குதல்.
  • போட்டிகளினை நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.

அரசியல் துறை

  • மக்களுக்கான தானியங்கி சேவைகளை வழங்குவர்.
  • அரசாங்க அமைப்புகளின் தரவுகளை சேமித்தல் மற்றும் பாதுகாத்தல்.
  • அரசாங்க அலுவலகங்களை இலத்திரனியல் மயமாக்குவதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையினை விரைவாகவும் விணைத்திறனாகவும் வழங்குகின்றது.

தகவல் தொடர்பாடல் சாதனங்களின் நன்மைகள்

  • ஒருவர் உலகில் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் இலகுவாக நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
  • மாணவர்கள் ஆசிரியர்களின் உதவி இன்றி தொலைதூரக் கல்வி ஆன்லைன் கற்றல் போன்றவற்றை அணுகி இலகுவாக தேடிக் கற்கக் கூடிய ஆற்றலினை மாணவர்களிடையே வளர்க்கின்றது.
  • ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்பாட்டை இலகுபடுத்துவதற்கு கணினி இணையம் திறன் பலகை என்பவற்றை பயன்படுத்தி இலகுவாக கற்பிக்கக் கூடியதாக காணப்படுகின்றது.
  • சிசிடிவி மூலம் ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பையும் வீட்டில் தனியாக இருக்கும் நபர்களின் பாதுகாப்பினையும் இது உறுதி செய்கின்றது.
  • வணிகத்தில் இ காமெர்ஸ், ஆன்லைன் வியாபாரம்,ஆன்லைன் விளம்பரங்கள் போன்றவற்றிற்கு உதவுகின்றது.
  • திரைப்படங்கள் பார்த்தல், இசை கேட்டல், சிறுகதை வாசித்தல் போன்ற சிறந்த பொழுதுபோக்குகளை அணுகுவதற்கு இலகுவாக காணப்படுகின்றது.
  • பேரிடர்களை தவிர்ப்பதற்காக முன் நெச்சரிக்கையான தகவல்களை வழங்குதல்.

தகவல் தொடர்பாடல் சாதனங்களினால் ஏற்படும் தீமைகள்

  • அதிக நேரம் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதால் கண்களின் பார்வைத் திறன் குறைந்து செல்கின்றது.
  • அதிக நேரம் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதால் சமூகத்தோடு சேர்ந்து இருக்கும் பழக்கம் குறைந்து கொண்டே செல்கின்றது.
  • சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் அதற்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதைத்தவிர பல்வேறுபட்ட உடல் உள உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர்.
  • சைபர் குற்றங்கள், இணையவழி ஏமாற்றங்கள், வங்கி நாணய மோசடிகள், போலியான போலியான தகவல்களை பரப்புவதற்கு ஏதுவாக அமைகின்றது.
  • மாணவர்கள் இணைய வழி கற்றலில் ஈடுபடும் பொழுது தவறான படங்கள் அல்லது வீடியோக்கள் வருவதன் மூலம் மாணவர்கள் வழி தவறி போதல்.
  • சமூக ஊடகங்களின் அதிக பயன்பாடு காரணமாக தவறான செய்திகள் அல்லது தகவல்கள் பரிமாறப்படுதல்.
  • தகவல் தொடர்பாடல் சாதனங்களின் பயன்பாடு காரணமாக சிறுவர்கள் தமது நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதை குறைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் குறைவடைந்து செல்கின்றது.
  • தகவல் தொடர்பாடல் சாதனங்கள் பற்றிய போதிய அளவு அறிவு மக்களிடம் காணப்படாததால் அவர்கள் தவறான வழிக்கு செல்வதற்கு வழி வகுக்கின்றது.

ஆகவே இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் சாதனங்கள் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. மக்கள் தகவல் தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பான போதிய ளவு அறிவினை பெற்று அதனை பயன்படுத்தி தமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் சிறந்த வழிகாட்டிகளாக இருத்தல் வேண்டும். இனி வரும் காலங்களில் எத்துறைகளை எடுத்துக் கொண்டாலும் தகவல் தொடர்பாடல் சாதனங்களின் ஆதிக்கமே முழுமையாக காணப்படும்.

மேலும் இது போன்ற தமிழ் கட்டுரைகள் இங்கே 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments