Friday, April 17, 2026
Homeகல்விபோக்குவரத்து வகைகள், சட்டதிட்டங்கள், நன்மைகள் மற்றும் இலங்கையின் போக்குவரத்து துறை

போக்குவரத்து வகைகள், சட்டதிட்டங்கள், நன்மைகள் மற்றும் இலங்கையின் போக்குவரத்து துறை

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் காணப்படுகிறது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு செல்வதால் வீதி விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.ஆகவே வீதியில் பயணம் செய்யும் பாதசாரிகள்,சாரதிகள் வீதிச் சட்டங்களைப் பின்பற்றி பயணம் செய்வது அவர்களின் பாதுகாப்பிற்கும் வீதியில் பயணம் செய்யும் ஏனையவர்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் துணைபுரிகிறது.

முற்காலத்தில் போக்குவரத்தானது விலங்குகளைப் பயன்படுத்தியும் நடந்தும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

உதாரணம்:

  • குதிரையில் செல்லுதல்
  • யானையில் செல்லுதல்
  • மாட்டு வண்டியில் செல்லுதல்

போக்குவரத்தின் வகைகள்

  1. தரை வழிப் போக்குவரத்து
  2. நீர் வழிப் போக்குவரத்து
  3. வான் வழிப் போக்குவரத்து
  4. விசேட பாதையில் செல்லும் போக்குவரத்து
போக்குவரத்தின் வகைகள்
போக்குவரத்தின் வகைகள்

தரைவழியில் பயணம் செய்யும் வாகனங்கள் எவை?

  • பேருந்து
  • மகிழூர்ந்து
  • முச்சக்கரவண்டி
  • சைக்கிள்
  • லொறி
  • பாரவூர்திகள்
  • மோட்டர் சைக்கிள்

நீர் நிலையில் பயணம் செய்யும் வாகனங்கள் எவை?

  • கப்பல்
  • படகு
  • தோணி
  • நீர் மூழ்கிக் கப்பல்
  • வள்ளம்

வான் வழியில் பயணம் செய்யும் வாகனங்கள் எவை?

  • ஆகாய விமானம்
  • உலங்கு வானூர்தி

விசேட பாதையில் பயணிப்பது

  • புகையிரத வண்டி

பாதசாரிகள்

கடைப்பிடிக்க வேண்டிய வீதிச் சட்டதிட்டங்கள்

  • வீதியின் வலது புறமாக நடந்து செல்லுதல்.
  • ஒருவர் பின் ஒருவராக நடந்து செல்லுதல்.
  • வெள்ளைக் கோட்டால் நடந்து செல்லுதல்.
  • வீதி ஒளிச்சமிஞ்சையைக்  கடைப்பிடித்தல்.

பாதையை எவ்வாறு கடக்க வேண்டும்?

  • முதலில் வலது பக்கம் பார்த்து பின்னர் இடது பக்கம் பார்த்து மீண்டும் வலது பக்கம் பார்த்து வாகனம் வாராத போது பாதையைக் கடத்தல் வேண்டும்.

வீதியில் செல்லும் போது செய்யக் கூடாதவை எவை?

  • கூட்டமாகச் செல்லுதல்.
  • வீதியில் விளையாடுதல்.
  • வீதியின் இடது புறமாகச் செல்லுதல்.
  • நண்பர்களுடன் கதைத்துக் கொண்டு செல்லுதல்.
  • நெரிசலான பாதையில் கடத்தல் .

வாகனம் செலுத்துவோர்

கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள்

  • ஒளிச் சமிஞ்சைகளுக்கு ஏற்ப வாகனத்தை செலுத்துதல்.
  • இடது புறமாக வாகனத்தைச் செலுத்துதல்.
  • முன்னே செல்லும் வாகனத்தை முந்திச் சொல்லும் போது அவ் வாகனத்தின் வலது புறத்தால் முந்திச் செல்லுதல்.
  • சுற்றுவட்டத்தில் வலது புறம் வரும் வாகனங்களுக்கு வழி விடுதல்.

வாகன சாரதிகள் விடும் தவறுகள் 

  • மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துதல்.
  • ஒளிச்சமிஞ்சைகளைக் கருத்தில் கொள்ளாது வாகனத்தைச் செலுத்துதல்.
  • தொலைபேசியில் உரையாடியவாறு வாகனத்தைச் செலுத்துதல்.
  • வலது புறமாக வாகனத்தைச் செலுத்துதல்.
  • அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்துதல்.
  • முன்னால் செல்லும் வாகனத்தை இடது புறமாக முந்திச் செல்லுதல்.

பொதுப்போக்குவரத்து

பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் எவை?

  • பின் பக்கத்தால் ஏறி முன் பக்கத்தால் இறங்குதல்.
  • பயணச்சீட்டைப் பெற்றுப் பயணம் செய்தல் வேண்டும்.
  • மதகுருமார்கள்,கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கிய ஆசனங்களில் அமரக் கூடாது.
  • பேருந்தில் புகைப்பிடித்தல்,மதுஅருந்துதல் கூடாது.
  • ஆசனங்களில் அமர்ந்து பயணித்தல்.

பொதுப்போக்குவரத்தின் போது செய்யக் கூடாதவை எவை?

  • மிதிபலகையில் நின்று பயணித்தல்.
  • மதுபானங்கள் அருந்தி விட்டுப் பயணித்தல்.
  • ஆசன இருக்கைகளைக் கிழித்தல்.
  • பேருந்துகளில் தமது பெயர்களை எழுதுதல்.
  • பேருந்தின் பின் பக்கத்தால் இறங்குதல்.
  • பிறருக்கு இடையூறு செய்தல்.
  • பேருந்துக்கு வெளியே கை,தலை என்பவற்றை நீட்டக் கூடாது.

பொதுப் போக்குவரத்தில் பயணஞ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • குறித்த நேரத்தில் பயணம் செய்யலாம்.
  • குறைந்த பணத்தில் பயணம் செய்யலாம்.
  • மாணவர்கள் பருவ காலப் பயணச் சீட்டைப் பெற்றுப் பயணிக்கலாம்.
  • அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடிதல்.
  • நேர அட்டவணைப்படி போக்குவரத்துச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

போக்குவரத்து தொடர்பான பொது தகவல்கள்

நேரசூசிப் படி இயங்கும் வாகனங்கள் எவை?

  • புகையிரதம்
  • பேருந்து
  • விமானம்
Sri lanka Train Transport
Sri lanka Train Transport

வீதிச் சமிஞ்சை விளக்கு

வீதிச் சமிஞ்சை விளக்கின் நிறங்களை மேலிருந்து கீழாக நோக்கும் போது சிவப்பு,செம்மஞ்சள்,பச்சை என்ற ஒழுங்கில் காணப்படும்.

  • சிவப்பு நிறம் – வாகனத்தை நிறுத்துக
  • செம்மஞ்சள் – பயணிக்க ஆயத்தமாகுதல்
  • பச்சை – வாகனத்தை செலுத்துதல்

பாதசாரி ஒளிச் சமிஞ்சை விளக்கு

பெலிக்கன் கடவையில் சிவப்பு மனிதன்,பச்சை மனிதன் ஆகிய இரண்டு ஒளிச் சமிஞ்சை நிறங்கள் ஒளிருகின்றன.

  • சிவப்பு மனிதன் – பாதையைக் கடக்கக் கூடாது.
  • பச்சை மனிதன் – பாதையைக் கடத்தல்

வீதியில் பயணிக்கும் போது விசேட ஒலி எழுப்பும் வாகனங்கள் எவை?

  • நோயாளி காவு வண்டி
  • தீயணைப்பு வண்டி
  • இடர் உதவி வண்டி
  • விசேட பாதுகாப்பு வாகனம்
  • அதிக நீளமுள்ள வாகனங்கள்

விமானப் போக்குவரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் 

  • உச்ச அளவிலான குறித்த நிறையை மாத்திரம் கொண்டு செல்லலாம்.
  • விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளல்.
  • விமானப் பயணத்திற்காக சுமார் 3 மணித்தியாலங்களுக்கு முன்பே விமான நிலையத்திற்குச் செல்லுதல்.
  • கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • வெளிநாட்டிற்கு குறித்த நாட்களுக்குள் செல்வதற்கான விசா அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருத்தல்.

இலங்கையில் போக்குவரத்து

இலங்கைப் போக்குவரத்துப் பாதைகளும் அவை குறிக்கும் நிறங்களும்

  • பெருந்தெருக்கள் – சிவப்பு நிறம்
  • புகையிரதப்பாதை- கறுப்பு நிறம்
  • அதிவேக நெடுஞ்சாலை – ஊதா நிறம்
  • சிறு வீதிகள் – செம்மஞ்சள் நிறம்

பிரதான வீதிகள்

இலங்கையில் உள்ள பிரதான பாதைகளை A வகைப் பாதை என அழைப்பார்கள்.பிரதான பாதைகளைப் பராமரிக்கும் பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Sri lanka Kandy Highway
Sri lanka Kandy Highway
  • A1 பாதை இலங்கையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட பாதை ஆகும்.இது கொழும்பு மற்றும் கண்டி நகரங்களுக்கான பாதை ஆகும்.
  • A2 பாதை இலங்கையில் கொழும்பு மற்றும் வெள்ளவாய நகரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • A9 பாதை கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பாதையைக் குறிக்கின்றது.
  • A10 கண்டி மற்றும் புத்தளத்திற்கு இடையிலான பாதையைக் குறிக்கின்றது.
  • A15 பாதை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நகரங்களுக்கிடையிலான பாதையைக் குறிக்கின்றது.

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் 

  • கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
  • மகிந்த ராஜபக்ச விமான நிலையம்
  • பலாலி விமான நிலையம்

இலங்கையில் உள்ள சர்வதேச துறைமுகங்கள்

  • கொழும்பு செயற்கைத் துறைமுகம்
  • அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகம்
  • திருகோணமலைத் துறைமுகம்

திருகோணமலைத் துறைமுகம் இயற்கைத் துறைமுகமாகும்.

தற்காலப் போக்குவரத்தின் நன்மைகள்

  • பாதுகாப்பான பயணத்திற்கு உதவும்.
  • எரிபொருள் சிக்கனம்.
  • அதிக மக்கள் பயணம் செய்யலாம்.
  • விரைவாகப் பயணம் செய்யலாம்.
  • பெருமளவு பொருட்களை இன்னோர் இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.
  • சௌகரியமான பயணத்திற்கு வழி வகுக்கும்.

ஆகவே போக்குவரத்து என்பது மனித வாழ்க்கையுடன் ஒன்றினைந்த ஒன்றாகக் காணப்படுகிறது.எனவே நாம் போக்குவரத்துச் சட்ட திட்டங்களை மதித்து எம்மையும் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பது எமது கடமையாகும்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments