Saturday, April 18, 2026
Homeசமயம்சைவ சமயத்தின் நாயன்மார்களும் அவர்களது அற்புதங்களின் சிறப்புகளும்

சைவ சமயத்தின் நாயன்மார்களும் அவர்களது அற்புதங்களின் சிறப்புகளும்

சைவ சமயத்தின் நாயன்மார்களும் அவர்களது அற்புதங்களின் சிறப்புகளும் ஒரு சிறப்பு பார்வை. சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாக சிவபெருமான் விளங்குகின்றார். சிவபெருமானை வணங்கி முத்தியின்பம் அடைந்தவர்களே இந்த நாயன்மார்கள் ஆவார்கள். சித்தத்தை சிவன் பால் செலுத்தியவர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.

சிவபெருமான ஆண்டாகவும், தோழனாகவும், தந்தையாகவும், குருவாகவும் வழிபட்டு முத்தியின்பம் அடைந்தார்கள். இவர்கள் சைவத்தின் வழி நின்று வாழ்ந்து காட்டியவர்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என உணர்த்தியவர்கள். அது மட்டுமின்றி தன்னலமற்ற சேவைகள் பல செய்தவர்கள். இவ் நாயன்மார்களை சமய குரவர்கள் என்றும் போற்றப்படுகின்றனர்.

சமய குரவர்கள்

  1. திருஞானசம்பந்தர்
  2. திருநாவுக்கரசர்
  3. சுந்தரமூர்த்தி நாயனார்
  4. மாணிக்கவாசகர்
சைவ சமயத்தின் நாயன்மார்களும் அவர்களது அற்புதங்களின் சிறப்புகளும்
சைவ சமயத்தின் நாயன்மார்களும் அவர்களது அற்புதங்களின் சிறப்புகளும்

ஆகிய நால்வரையும் நாம் சமயக் குரவர்கள் என அழைக்கின்றோம். இதில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் மூவரையும் தேவார முதலிகள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

திருஞானசம்பந்தர் 

இவர் சோழவள நாட்டிலே சீர்காழி பதியில் பிறந்தார். இவர் சிவபாதவிருதயாருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆளுடைய பிள்ளை என்பது பெற்றோர்கள் வைத்த பெயராகும். சிறுவயதில் தனது தந்தையுடன் கோயிலுக்கு செல்லும் வழக்கம் உண்டு. அப்பொழுது சிவபாதவிருதையார் குளத்தில் நீராடுவதற்காக மூழ்கிய போது தனது தந்தையை காணவில்லை என ஞானசம்பந்தர் அழுதார்.

அப்பொழுது சிவபெருமான் இடப வாகனத்தில் காட்சியளித்து பசியால் அழுத குழந்தைக்கு உமாதேவியார் ஞானப்பால் கொடுத்து அவரின் பசியை போக்கினார். தந்தை வந்து உனக்கு யார் பால் தந்தது என கேட்ட பொழுது கோயிலை கைகாட்டி ‘தோடுடைய செவியன்…’ என்ற தேவாரத்தினைப் பாடினார்.மூன்று வயதில் தேவாரம் பாடிய பெருமை இவரையே சாரும்.

சம்பந்தரின் மறு பெயர்கள்

  1. ஞானசம்பந்தர்
  2. காளி வள்ளல்
  3. பாலவராயன்
  4. ஆளுடைய பிள்ளையார்

என பல வகையான பெயர்களால் அழைக்கப்படுகின்றார்

சம்பந்தர் செய்த அற்புதங்கள்

  • திருவாலங்காடு கதவினை மூடுவதற்கு பாடியமை-

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்து தலங்களை தரிசித்த பொழுது திருவாலங்காட்டு கதவினை திருநாவுக்கரசர் திறக்க அக் கதவினை திருஞானசம்பந்தர் மீண்டும் மூடினார்.

  • பொற்றாளம் பெற்றமை 

திருஞானசம்பந்தர் திருக்கோலாக்கா என்ற தலத்தில் இருக்கின்ற இறைவனை தரிசிக்க சென்ற பொழுது இறைவனை நினைத்து கையில் தாளம் போட்டவாறு தேவாரம் பாடினர். இதைப் பார்த்த சிவபெருமான் அவருக்கு ஐந்தெழுத்து மந்திரம் பொறிக்கப்பட்ட பொற்றாளம் ஒன்றைக் கொடுத்தார். பொற்றாளம் பெற்ற திருஞானசம்பந்தர் ‘மடையில் வாளை..’ என்ற தேவாரத்தைப் பாடினார்.

  • பாலை நிலத்தினை நெய்தல் நிலமாக மாற்றியமை

திருநலைப் பள்ளி மக்கள் சம்பந்தரை தமது ஊருக்கு அழைத்து தமது குறைகளை கூறினார்கள். இதை செவிமடுத்த சம்பந்தர் அவ் ஊரில் பாலை நிலமாக மாறி இருந்த நிலத்தை கண்டு மனம் வருந்தினார். பின்னர் சிவபெருமானை நினைத்து ‘காரைகள் கூகை முல்லை..’ என்னும் தேவாரத்தைப் பாடினார். அப்பொழுது பாலை நிலங்கள் யாவும் நெய்தல் நிலங்களாக மாறின.

  • குளிர்ச்சுரம் போக்கியமை 

திருஞானசம்பந்தர் தனது அடியவர்களுடன் திருக்கொடி மாடச் செங்குன்றூரை அடைந்த பொழுது அங்கு அடியவர்களை குளிர்ச்சுரம் வருத்தியது. இதைக் கண்ட திருஞானசம்பந்தர் இறைவனைப் பார்த்து ‘அவ்வினை கிவ்வினை..’ என்ற பதிகத்தைப் பாடினார். அப்பொழுது குளிர்ச்சுரம் நீங்கியது.

திருநாவுக்கரசர்

இவர் திருமுனை பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தார். புகழனருக்கும் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் தமக்கையார் பெயர் திலகவதியார் ஆகும். இவருக்கு மருநீக்கியர் என்பது பெற்றோர்கள் இட்ட பெயராகும். கல்வி, கேள்விகள் சிறந்து விளங்கிய இவர் சமணர்களின் பால் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தில் இருந்து சமண சமயத்துக்கு மாறினார்.

இதனால் திலகவதியார் தனது தம்பியை மீண்டும் சைவ சமயத்துக்கு மீட்டுத் தருமாறு இறைவனிடம் கேட்ட பொழுது அவருக்கு சூலை நோயைக் கொடுத்தார். சூலை நோயின் கொடூரத்தை தாங்க முடியாத மருநீக்கியர் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு சென்று கூற்றாயினவாறு எனும் தேவாரத்தைப் பாடினார். அப்பொழுது அவரது சூலை நோய் நீங்கியது. இதனால் சைவத்தின் மகிமையை அறிந்த நாவக்கரசர் மீண்டும் சைவ சமயத்துக்கு மாறினார்.

திருநாவுக்கரசரின் மறுபெயர்கள் 

  1. தாண்டக வேந்தர்
  2. உழவாரப்படையாளி
  3. அப்பர்
  4. மருநீக்கியர்
  5. தர்மசேனர்

திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள் 

  • திருவாலங்காடு கதவினை திறக்க பாடியமை 

நீண்ட கலமாக திறக்கப்படாது இருந்த திருவாலங்காட்டு கதவினை திருநாவுக்கரசர் தேவாரம்பாடி திறந்து வைத்தார்.

  • பஞ்சம் போக்க படிக்காசு பெற்றமை

சம்பந்தருடன் திருநாவுக்கரசரும் சேர்ந்து திருத்தலங்களை தரிசித்து வந்த பொழுது திருவீழிமிழலை என்ற தலத்தை அடைந்தனர். அங்கு நீண்ட காலமாக மழை இன்மையால் அவ் ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பசியால் வாடினார்கள். இதைப் பார்த்த இரண்டு நாயன்மார்களும் மிகுந்த கவலை உற்றனர். அப்பொழுது அவர்களின் கனவில் இறைவன் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் படிக்காசு தருகின்றோம். இக் காசினைப் பயன்படுத்தி மக்களின் பசியைப் போக்குமாறு கூறினார். இதைக் கேள்வியுற்ற சம்பந்தரும் நாவுக்கரசரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அந்தப் படிக்காசினைப் பெற்று மக்களின் பசியை போக்கினார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் 

இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் பிறந்தார். சடையனாருக்கும் இசைஞானியாருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் நம்பியாரூராகும். திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராகிய நரசிங்கமுனையார் நம்பியாரூரரை தனது பிள்ளை போல் வளர்த்து வந்தார். நம்பியாரூரரை சிவபெருமான் அவரது திருமண பந்தத்தில் வைத்து தடுத்தாட் கொண்டார்.

மேலும் இவர் தனது மனைவியான பரவையாருக்கு பங்குனி உத்திர திருநாளை கொண்டாடுவதற்கு அவருக்கு பொன் தேவைப்பட்டது. இதன்போது என்ன செய்வது என்று தெரியாத போது தலையின் கீழ் செங்கட்டிகளை வைத்து உறங்கினர். அப்பொழுது நித்திரை விட்டு எழுந்த பொழுது செங்கட்டிகள் அனைத்தும் பொன்கட்டிகளாக மாறி இருந்தது. இப் பொன் கட்டிகளை வைத்து பங்குனி உத்திர நாளை சிறப்பாக செய்து முடித்தனர்

.சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அற்புதங்கள்

  • தொண்டர் சீர் பரவியமை

திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் எல்லோரும் ஒன்று கூடி இருந்தார்கள். இதைக்கண்ட சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வடியார்களுக்கு எல்லாம் எப்பொழுது நான் அடியேன் ஆவேன் என்று எண்ணியவாறு கோயிலுக்குள் சென்றார். அப்பொழுது அங்குள்ள இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். சுந்தரர் அவ்வடியினைப் பயன்படுத்தி சிவனடியார்களின் பெருமைகளை உலகறியச் செய்தார்.

மாணிக்கவாசகர் 

பாண்டிய நாட்டில் உள்ள திருவாத ஊரில் பிறந்தார் இவர் திருவாத ஊரில் பிறந்ததால் இவரை வாத ஊரர் எனவும் அழைத்தார்கள் இவர் சம்புபாத ஆசிரியருக்கு சிவஞான அதிகாரிக்கும் மகனாகப் பிறந்தார் இவர் அரிமத்தின பாண்டிய மன்னனன் அமைச்சராக பணியாற்றினர்.

இவ்வாறு பணியாற்றும் பொழுது குதிரை வாங்குவதற்காக நன்னன் பொற்காசுகளை கொடுத்து திருப்பெருந்துறைக்கு அனுப்பினான் அப்பொழுது தான் குதிரை வாங்க வந்ததை மறந்து குறுந்த மர நிழலில் இருந்த குருவைக் கண்டு அவரிடம் போய் தன்னை சீடராக இருக்குமாறு கூறி அங்கேயே இருந்து விட்டார் மன்னன் கூறி அனுப்பிய விடயத்தை மறந்து அரசன் கொடுத்த பொன்னை அங்கே செலவழித்தார்

மாணிக்கவாசகர் ஆற்றிய அற்புதங்கள்

  •  வாய் பேசாத பெண்ணை பேச வைத்தமை

சோழ தேசத்து சிவ பக்த ஒருவர் இலங்கை சிவாலயங்களை வழிபட சென்ற பொழுது ‘பொன்னம்பலம் நீடூடி வாழ்க’ என்று சொல்லிக் கொண்டே சென்றார். இதைக்கண்ட பௌத்தரசன் அவரை அழைத்து இதற்கான காரணத்தை கேட்டறிந்தார். அப்பொழுது அவ்வடியவர் சிதம்பரத்தின் மகிமையை கூறினர். இதைக் கேட்டு அவன் ஆலயத்தை அழித்து அதில் பௌத்த கோயிலை கட்டுவேன் எனக் கூறினான்.

தனது வாய் பேசாத பெண்ணுடன் மற்றும் தனது பரிவாரங்களுடனும் அவ்வாலயத்துக்குள் சென்றான். அவ் ஆலயத்தில் இருந்த சிவனடியார்களை வாதுக் அழைத்தான். அப்பொழுது அங்கிருந்த மாணிக்கவாசகர் அவ்வரசனின் வாய் பேச முடியாத பெண்ணை வாய் பேச வைத்தார். சைவத்தின் மகிமையை உணர்ந்து அங்கு வந்த எல்லோரும் சைவர்கள் ஆக மாறினார்கள்.

நாயன்மார்களும் அவர்கள் முத்து அடைந்த தினங்களும் மார்க்கங்களும்

  1. திருஞானசம்பந்தர்-வைகாசி விசாகம் , சற்புத்திர மார்க்கம்
  2. திருநாவுக்கரசர்-சித்திரை சதயம் ,  தாச மார்க்கம்
  3. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடிச் சுவாதி , சகமார்க்கம்
  4. மாணிக்கவாசகர்- ஆனி மகம் , சன்மார்க்கம்

சமய குரவர் நால்வரும் சைவ சமயத்திற்கு பல பணிகளை ஆற்றியது மட்டுமல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை சமயத்திற்காகவே அர்ப்பணித்து முத்தியின்பம் அடைந்துள்ளார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments